புதிய தொழிலாளியைச் சேர்ப்பது எப்படி?
பெயரும் நாள் கூலியும் மட்டும் போதும். மற்ற எல்லாம் விருப்பத்திற்கேற்ப.
‘இன்று’ திரையிலோ ‘தொழிலாளர்கள்’ டேபிலோ ‘தொழிலாளியைச் சேர்’ என்பதைத் தட்டுங்கள். தொழிலாளியின் பெயரையும் நாள் கூலியையும் எழுதிச் சேமியுங்கள்.
‘மேலும் விவரங்கள்’ பகுதியில் போன் எண், வேலை, முகவரி, போட்டோ, குறிப்புகள், வேலை தொடங்கிய நாள் ஆகியவற்றைச் சேர்க்கலாம். நீங்கள் மாற்றாவிட்டால் தொடங்கிய நாள் இன்றைய தேதியாக இருக்கும். எந்த விவரத்தையும் பிறகு திருத்தலாம்.
அதே பெயரில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் Hazri உங்களுக்குச் சொல்லும், ஆனாலும் நீங்கள் அவரைச் சேர்க்கலாம். வேலை அல்லது போட்டோ இருந்தால் இருவரையும் பிரித்தறிய உதவும்.